/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
10,805 தேர்தல் பணியாளர்களுக்கு வரும் 7ம் தேதி 2ம் கட்ட பயிற்சி
/
10,805 தேர்தல் பணியாளர்களுக்கு வரும் 7ம் தேதி 2ம் கட்ட பயிற்சி
10,805 தேர்தல் பணியாளர்களுக்கு வரும் 7ம் தேதி 2ம் கட்ட பயிற்சி
10,805 தேர்தல் பணியாளர்களுக்கு வரும் 7ம் தேதி 2ம் கட்ட பயிற்சி
ADDED : ஏப் 03, 2024 10:08 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், லோக்சபா தேர்தல் பணியில் ஈடுபடும் தேர்தல் பணியாளர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி, வரும் 7ம் தேதி நடக்க இருக்கிறது. இதில், 10,805 பேர் பங்கேற்க இருப்பதாக தேர்தல் பிரிவு அலுவலர்கள் தெரிவித்தனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டசபை தொகுதிகளில், லோக்சபா தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு கடந்த 24ம் தேதி பயிற்சி நடந்தது.
இந்த பயிற்சியில், ஓட்டுப்பதிவு நடைமுறை, ஓட்டுப்பதிவு இயந்திரங்களை கையாளுதல், அனைத்து வகை படிவங்கள் பூர்த்தி செய்தல், தலைமை ஓட்டுப்பதிவு அலுவலர் நாட்குறிப்பு பின்பற்றுதல் உள்ளிட்டவை குறித்து விளக்கப்பட்டது.
தொடர்ந்து, சீரற்றமயமாக்கல் முறையில், சட்டசபை தொகுதிகளில், தலைமை ஓட்டுப்பதிவு அலுவலர்கள், ஓட்டுப்பதிவு அலுவலர்கள் பணிபுரிவது தொடர்பான ஆலோசனை கூட்டம், மாவட்ட தேர்தல் அலுவரும் கலெக்டருமான அருண்ராஜ் தலைமையில், நேற்று முன்தினம் நடந்தது.
அதில், இரண்டாம் கட்டமாக, 2,825 ஓட்டுச்சாவடிகளில் பணிபுரியவுள்ள ஓட்டுப்பதிவு தலைமை அலுவலர், ஓட்டுப்பதிவு அலுலர்கள் என, மொத்தம் 10,805 பேருக்கு, வரும் 7ம் தேதி, அந்தந்த சட்டசபை தொகுதிகளில், முதற்கட்ட பயிற்சி நடந்த அதே இடங்களில், காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை பயிற்சி அளிக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டது.
இதில், அனைவரும் பங்கேற்க வேண்டும் என, மாவட்ட தேர்தல் பிரிவில் இருந்து தகவல் அளிக்கப்பட்டுள்ளது என, தேர்தல் பிரிவு அலுவலர்கள் தெரிவித்தனர்.
மாவட்டத்தில் லோக்சபா தேர்தலில் பணிபுரியவுள்ள தேர்தல் அலுவலர்களுக்கு, வரும் 7ம் தேதி இரண்டாம் கட்ட பயிற்சி அளிக்கப்படுகிறது. முதல் பயிற்சியில் பங்கேற்க தவறியவர்கள், இந்த பயிற்சியில் பங்கேற்று தேர்தல் நடைமுறைகளை அறிந்து கொள்ளலாம்.
- ச.அருண்ராஜ்,
மாவட்ட தேர்தல் அலுவலர், செங்கல்பட்டு.

