/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
டிராக்டர் டிப்பர் மீது பைக் மோதல் வாலிபர் பலி: மற்றொருவர் காயம்
/
டிராக்டர் டிப்பர் மீது பைக் மோதல் வாலிபர் பலி: மற்றொருவர் காயம்
டிராக்டர் டிப்பர் மீது பைக் மோதல் வாலிபர் பலி: மற்றொருவர் காயம்
டிராக்டர் டிப்பர் மீது பைக் மோதல் வாலிபர் பலி: மற்றொருவர் காயம்
ADDED : ஜூலை 23, 2025 11:38 PM
திருக்கோவிலுார்: அரகண்டநல்லுார் அருகே நின்றிருந்த டிராக்டர் டிப்பர் மீது பைக் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
அரகண்டநல்லுார், முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயராமன் மகன் பாலாஜி, 20; இவரது நண்பர் ஆறுமுகம் மகன் ராஜா, 24; இருவரும் நேற்று முன்தினம் இரவு விழுப்புரத்தில் இருந்து அரகண்டநல்லுார் திரும்பினர்.
இரவு 7:30 மணிக்கு, விழுப்புரம் - திருக்கோவிலுார் சாலையில், வடகரைதாழனுார், காட்டு கோவில் அருகே சென்றபோது, மழை காரணமாக நிலை தடுமாறிய பைக், சாலையோரம் நின்றிருந்த டிராக்டர் டிப்பர் மீது மோதியது.
இதில் துாக்கி வீசப்பட்ட இருவரும் பலத்த காயம் அடைந்தனர். இருவரும் திருக்கோவிலுார் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் பாலாஜி நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்தார். ராஜா சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்த புகாரின் பேரில் அரகண்டநல்லுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

