ADDED : ஆக 16, 2025 11:45 PM
சங்கராபுரம்; சங்கராபுரத்தில் பஸ் நிலையத்தில் நின்றிருந்த பெண்ணிடம் நகை, பணம் திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
சங்கராபுரம் அடுத்த சோழம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் செல்வேந்திரன் மனைவி உஷா, 35; இவர் நேற்று முன்தினம் சங்கராபுரத்தில் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கினார். பொருட்கள் மற்றும் பர்சினை பையில் வைத்து கொண்டு, பஸ் நிலையத்தில் இருந்து பஸ்சில் சொந்த ஊருக்கு புறப்பட்டார்.
வீட்டில் பையை திறந்து பார்த்தபோது, மணி பர்ஸ் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பர்சில் 3 கிராம் எடையுள்ள தங்க காசு மற்றும் ரூ.40 ஆயிரம் பணம் இருந்தது. பஸ் நிலைய கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர் மணி பர்சினை திருடியுள்ளனர். இது குறித்து உஷா அளித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிந்து பணம், நகையினை திருடிய மர்மநபரை தேடி வருகின்றனர்.

