/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மணிமுக்தா அணையின் ஷட்டர்கள் பழுதால் தண்ணீர் வெளியேற்றம்
/
மணிமுக்தா அணையின் ஷட்டர்கள் பழுதால் தண்ணீர் வெளியேற்றம்
மணிமுக்தா அணையின் ஷட்டர்கள் பழுதால் தண்ணீர் வெளியேற்றம்
மணிமுக்தா அணையின் ஷட்டர்கள் பழுதால் தண்ணீர் வெளியேற்றம்
ADDED : அக் 25, 2025 07:54 AM

கள்ளக்குறிச்சி: சூளாங்குறிச்சி மணிமுக்தா அணையில் தண்ணீர் தேக்கி வைக்க முடியாததால் தண்ணீர் ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கள்ளக்குறிச்சி அடுத்த சூளாங்குறிச்சியில் 36 அடி உயரம் (736.96 மில்லியன் கன அடி) கொள்ளளவு கொண்ட மணிமுக்தா அணை உள்ளது.
மழைக்காலத்தில கல்வராயன்மலை பகுதியில் பெய்யும் மழை மணி மற்றும் முக்தா ஆறுகள் வழியாக அணைக்கு வருகிறது.
இதுதவிர மூரார்பாளையம் பாப்பாங்கால் ஓடையும் அணைக்கு நீர்வரத்தாக உள்ளது. மழைக்காலத்தில் அணையில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு, பாசனத்திற்காக மதகு வழியாக திறக்கப்படும்.
இதன் மூலம் புதிய மற்றும் பழைய பாசனத்தைச் சேர்ந்த 5,493 ஏக்கர் பரப்பளவிலான விளைநிலங்கள் பயன்பெறுகிறது.
அணையில் உள்ள பழைய ஷட்டர்கள் வலுவிழந்து, தண்ணீர் தாங்கும் திறன் முற்றிலுமாக குறைந்துள்ளது. ஷட்டர்கள் எப்போது வேண்டுமானாலும் உடையலாம் என்ற நிலை இருப்பதால், அணையில் தண்ணீர் தேக்கி வைக்க முடியாத நிலை உள்ளது.
இதையொட்டி, பழைய ஷட்டர்களை புதுப்பிக்க 20.76 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் விரைவில் தொடங்க உள்ளது.
கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்த நிலையில், அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் பழைய ஷட்டர்கள் வழியாக ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. நேற்றைய நிலவரப்படி விநாடிக்கு 1,300 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டதால், மணிமுக்தா ஆற்றில் அதிகளவு தண்ணீர் செல்கிறது.

