/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
உளுந்துார்பேட்டை வியாபாரிகள் சங்க பொதுக்குழு கூட்டம்
/
உளுந்துார்பேட்டை வியாபாரிகள் சங்க பொதுக்குழு கூட்டம்
உளுந்துார்பேட்டை வியாபாரிகள் சங்க பொதுக்குழு கூட்டம்
உளுந்துார்பேட்டை வியாபாரிகள் சங்க பொதுக்குழு கூட்டம்
ADDED : ஆக 24, 2025 10:23 PM

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை வியாபாரிகள் சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட தலைவர் முகமதுகனி தலைமை தாங்கினார். வணிகவரி அதிரடிப்படை குறைகளை சுட்டிக்காட்டி அதை ஜி.எஸ்.டி., மேல் அதிகாரிகளுக்கு தகவல் சொல்ல மட்டுமே அதிகாரம் அளிக்க வேண்டும். எக்காணத்தைக் கொண்டும் நடுரோட்டில் நின்று பன்மடங்கு அபராதம் விதிப்பதை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் உணவு பாதுகாப்பு அலுவலர் மான்சி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உணவு பாதுகாப்பு முறைகள் குறித்து கருத்துக்களை எடுத்துரைத்தார். கூட்டத்தில் கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட செயலாளர் இளங்கோவன், மாநில துணைத்தலைவர் கணேசன், மாநில இணை செ யலாளர் ஏழுமலை, மாவட்ட பொருளாளர் சங்கர், மாவட்ட இணை செயலாளர் மணிகண்டன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ரகுமான், நகர நிர்வாகிகள் பக்ருதீன், மணி, நல்லதம்பி, நுார்தீன், தீபக், சங்கர், தியாகு, மாவட்ட செய்தி தொடர்பாளர் ராஜா முகமது உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.