/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கல்வராயன்மலையில் பயிற்சி வேளாண் இணை இயக்குனர் ஆய்வு
/
கல்வராயன்மலையில் பயிற்சி வேளாண் இணை இயக்குனர் ஆய்வு
கல்வராயன்மலையில் பயிற்சி வேளாண் இணை இயக்குனர் ஆய்வு
கல்வராயன்மலையில் பயிற்சி வேளாண் இணை இயக்குனர் ஆய்வு
ADDED : ஆக 25, 2025 10:53 PM

சங்கராபுரம் ;கல்வராயன்மலை வட்டாரத்தில் விவசாயிகளுக்கான பயிற்சி குறித்து வேளாண்மை இணை இயக்குனர் ஆய்வு செய்தார்.
குருந்தானியங்களின் சாகுபடி பரப்பு மற்றும் உற்பத்தி திறனை அதிகரிக்கும் பொருட்டு வேளாண்மை துறை மூலம் மலைவாழ் உழவர் முன்னேற்ற திட்டம், இயற்கை வேளாண்மைக்கான தேசிய இயக்கம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் தொடர்பாக விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. கல்வராயன்மலையில் உள்ள வேங்கோடு ஊராட்சி மொட்டையனுார் கிராமத்தில் நடந்த விவசாயிகளுக்கான பயிற்சினை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சத்தியமூர்த்தி ஆய்வு செய்தார். அப்போது வட்டார துணை வேளாண்மை அலுவலர் முருகேசன், ஊராட்சி தலைவர் கிருஷ்ணன் மற்றும் விவசாயிகள் உடனிருந்தனர்.