/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
விழுப்புரம் மாவட்டத்தில் திருக்கோவிலுாரை இணைக்க வேண்டும்
/
விழுப்புரம் மாவட்டத்தில் திருக்கோவிலுாரை இணைக்க வேண்டும்
விழுப்புரம் மாவட்டத்தில் திருக்கோவிலுாரை இணைக்க வேண்டும்
விழுப்புரம் மாவட்டத்தில் திருக்கோவிலுாரை இணைக்க வேண்டும்
ADDED : டிச 23, 2025 07:21 AM
வி ழுப்புரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்தபோது திருக்கோவிலுாரை, விழுப்புரம் மாவட்டத்துடன் சேர்ந்திருப்பது தான் திருக்கோவிலூர் தொகுதி மற்றும் சுற்றுவட்டார கிராம மக்களுக்கு நிர்வாக ரீதியாக வசதியாக இருக்கும் எனக் கூறப்பட்டது.
இதனை செவி சாய்க்காத அப்போதைய அ.தி.மு.க., அரசு கள்ளக்குறிச்சி மாவட்டத்துடன் இணைத்தது. இதன் காரணமாக திருக்கோவிலுார் உள்ளிட்ட 20 ஊராட்சி நிர்வாகமும் மாற்றான் தாய் மனப்பான்மையுடன் கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகத்தால் புறக்கணிக்கப்படுவதாக கூறி சம்பந்தப்பட்ட ஊராட்சி தலைவர்கள் விழுப்புரம் மாவட்டத்துடன் சேர்க்க வலியுறுத்தி கிராம சபை கூட்டத்தில் தீர்மானமும் நிறைவேற்றினர்.
தேர்தல் ஆணையமும் திருக்கோவிலுாரை, விழுப்புரம் மாவட்ட கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. மாவட்டம் பிரிக்கப்பட்ட பொழுது எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க., வின் திருக்கோவிலுார் தொகுதி எம்.எல்.ஏ., பொன்முடி திருக்கோவிலுாரை விழுப்புரம் மாவட்டத்துடன் சேர்க்க வேண்டும் என்ற திருக்கோவிலுார் சுற்றுவட்டார கிராம மக்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பேசினார்.
மாவட்டத்தை பிரித்த பின்பு, அ.தி.மு.க., வை தவிர்த்து மற்ற அரசியல் கட்சிகள் திருக்கோவிலுார் தொகுதியை விழுப்புரம் மாவட்ட செயலாளர்களின் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
திருக்கோவிலுார் உள்ளிட்ட 20 ஊராட்சிகளை விழுப்புரம் மாவட்டத்தில் சேர்க்க வேண்டும் என பொதுமக்களும், சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகமும் வலியுறுத்தி வரும் நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் திருக்கோவிலுார் தொகுதிக்கு உட்பட்ட 70 சதவீதம் பகுதி பொதுமக்களும் தங்கள் பாதிப்பை சுட்டி காட்ட துவங்கி உள்ளனர்.
தேர்தல் பிரசாரத்திற்காக சுற்றுப்பயணம் மேற்கொண்ட பா.ஜ., மாநிலத் தலைவர் நைனார் நாகேந்திரன் கண்டாச்சிபுரத்திற்கு வந்த பொழுது, திருக்கோவிலுாரை, விழுப்புரம் மாவட்டத்தில் சேர்க்கும் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்து பேசினார்.
நேற்று முன்தினம் திருக்கோவிலுாரில் நடந்த ஐ.ஜே.கே., தொகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், கட்சியின் நிறுவனர் பாரிவேந்தரும் இக்கோரிக்கையை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றினார்.
திருக்கோவிலுார் உள்ளிட்ட 20 ஊராட்சிகளை விழுப்புரம் மாவட்டத்துடன் இணைத்து கண்டாச்சிபுரம், திருவெண்ணைநல்லுார் தாலுகாவை திருக்கோவிலுார் கோட்டத்துடன் சேர்க்க தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை தேர்தல் நெருங்கும் சூழலில் அரசியல் கட்சிகள் கையில் எடுத்திருப்பது ஆளும் தி.மு.க., விற்கு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.

