/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
/
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
ADDED : டிச 23, 2025 07:17 AM

திருக்கோவிலுார்: தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருக்கோவிலுாரில் நடந்தது.
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருக்கோவிலுாரில், மாநில துணை செயலாளர் முருகன் தலைமையில் நடந்தது. மாவட்ட பொறுப்பாளர்கள் கோமதுரை, அன்பழகன், ராசு, கவிதா, தமிழரசி முன்னிலை வகித்தனர்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை டிசம்பர் மாதத்திற்குள் வழங்க வேண்டும், டெட் தேர்வு தொடர்பான பிரச்னையை சரிசெய்ய வேண்டும் என்பது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
விழுப்புரம் மாவட்ட பள்ளி துணை ஆய்வாளர் ஞானமணி, தமிழ்நாடு தொழிற்கல்வி ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில பொதுச் செயலாளர் மோகன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.