/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மனவளர்ச்சி குன்றியோர் பள்ளியில் மாற்றுத் திறனாளி நல அலுவலர் ஆய்வு
/
மனவளர்ச்சி குன்றியோர் பள்ளியில் மாற்றுத் திறனாளி நல அலுவலர் ஆய்வு
மனவளர்ச்சி குன்றியோர் பள்ளியில் மாற்றுத் திறனாளி நல அலுவலர் ஆய்வு
மனவளர்ச்சி குன்றியோர் பள்ளியில் மாற்றுத் திறனாளி நல அலுவலர் ஆய்வு
ADDED : செப் 23, 2024 11:51 PM
கள்ளக்குறிச்சி: க.மாமனந்தல் ஆதி மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளியில் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் ஆய்வு மேற்கொண்டார்.
கள்ளக்குறிச்சி அடுத்த க.மாமனந்தலில் உள்ள மனவளர்ச்சி குன்றியோர்களுக்கான கருணை இல்லம் ஆதி சிறப்பு பள்ளியில் மாவட்ட மாற்றுத்திறனாளி நலத்துறை அலுவலர் சுப்ரமணி, நேற்று முன்தினம் திடீர் ஆய்வு நடத்தினார். மனவளர்ச்சி குன்றிய பெண்கள் 15 மற்றும் மனவளர்ச்சி குன்றிய ஆண்கள் 25 என மொத்தம் 40 பேர் உள்ள இந்த சிறப்பு பள்ளியில் மாற்றுத்திறனாளி சிறார்களுக்கான சுகாதாரம், சுற்றுப்புற துாய்மை, சிறப்பு கல்வி ஆகியன குறித்து ஆய்வு செய்து கேட்டறிந்தார்.
மேலும் மதிய உணவின் தரம் குறித்தும் ஆய்வு செய்தார். ஆய்வின போது கருணை இல்ல நிர்வாகி சிவசூர்யன் உடனிருந்தார்.