ADDED : அக் 26, 2025 03:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கரியாலுார் சிறப்பு சப் இன்ஸ்பெக்டரை சஸ்பெண்ட் செய்து எஸ்.பி., உத்தரவிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கரியாலுார் காவல் நிலைய ஸ்டேஷனில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தவர் சக்திவேல். இவர், பொதுமக்கள் அளிக்கும் புகார் மனு மீது உரிய விசாரணை மேற்கொள்ளாமல் இருப்பதாக புகார் எழுந்தது. இதுகுறித்து தகவலறிந்த எஸ்.பி., மாதவன் துறை ரீதியாக விசாரணை மேற்கொண்டார். அதில், புகார் மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொள்ளாமல் இருந்தது உறுதியானது.
இதையடுத்து, சக்திவேலை சஸ்பெண்ட் செய்து எஸ்.பி., மாதவன் நேற்று உத்தரவிட்டார்.

