/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சாம்பிராணி ஆலையில் தீ போராடி அணைத்த வீரர்கள்
/
சாம்பிராணி ஆலையில் தீ போராடி அணைத்த வீரர்கள்
ADDED : மே 04, 2025 02:28 AM

சின்னசேலம்:கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த பூண்டி, அம்மையகரம் கிராமத்தில், தனியார் ஊதுபத்தி மற்றும் சாம்பிராணி தயாரிக்கும் ஆலை உள்ளது. இங்கு, 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.
நேற்று பகல், 1:00 மணிக்கு, ஆலையில் கரி துண்டுகள் அரைக்கும் இடத்தில், திடீரென தீ பிடித்தது. ஊழியர்கள், தீயை அணைக்க முயன்றனர். ஆனால், தீ ஆலை முழுதும் வேகமாக பரவியது.
இதுகுறித்த தகவலில், 15க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், தீயை போராடி அணைத்தனர்.
இந்த விபத்தில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாகின. அதிர்ஷ்டவசமாக தொழிலாளர்களுக்கு, எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இச்சம்பவத்தால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

