/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அரசம்பட்டு அரசு பள்ளியில் குறு மைய விளையாட்டு போட்டி
/
அரசம்பட்டு அரசு பள்ளியில் குறு மைய விளையாட்டு போட்டி
அரசம்பட்டு அரசு பள்ளியில் குறு மைய விளையாட்டு போட்டி
அரசம்பட்டு அரசு பள்ளியில் குறு மைய விளையாட்டு போட்டி
ADDED : ஜூலை 24, 2025 03:53 AM

சங்கராபுரம்: அரசம்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் குறு மைய விளையாட்டி போட்டி நடந்தது.
அரசம்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியின் குறுமைய விளையாட்டு போட்டி, செயின்ட் ஜோசப் பள்ளி வளாகத்தில் நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் ராமசாமி தலைமை தாங்கினார். செயின்ட் ஜோசப் பள்ளி தாளாளர் ஜோசப் சீனிவாசன் போட்டிகளை துவக்கி வைத்தார்.
மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் செல்வகுமார் முன்னிலை வைத்தார். சம்சாத் பேகம் வரவேற்றார். மாவட்ட செஸ் அசோசியேஷன் தலைவர் ரவிச்சந்திரன், ஜெய்பிரதரஸ் நற்பணி மன்ற தலைவர் விஜயகுமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். பள்ளியில் செஸ், கேரம், கபடி உட்பட பல்வேறு போட்டிகள் நடந்தது.
உடற் கல்வி ஆசிரியர்கள் கிருஷ்ணன், மணிமாறன், ராமச்சந்திரன், வரதராஜன், விஜயகுமார், கார்த்திகேயன், பரமேஸ்வரி, புவனேஸ்வரி, பவன்குமார் ஆகியோர் நடத்தினர். குறு மைய விளையாட்டு போட்டியில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர். இதில் வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவர். ஆசிரியர் சிவசக்தி நன்றி கூறினார்.

