/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பா.ம.க., நிர்வாகியிடம் ரூ.2.10 லட்சம் 'அபேஸ்'
/
பா.ம.க., நிர்வாகியிடம் ரூ.2.10 லட்சம் 'அபேஸ்'
ADDED : பிப் 07, 2024 07:49 AM
உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே பா.ம.க.. ஒன்றிய செயலாளரிடமிருந்து 2.10 லட்சம் ரூபாயை கொள்ளையடித்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
உளுந்துார்பேட்டை அடுத்த கூ.கள்ளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் ரவிக்குமார், 35; பா.ம.க., தெற்கு ஒன்றிய செயலாளர்.
இவர், நேற்று மதியம் 12:00 மணியளவில் தனது பல்சர் பைக்கில் வீட்டிலிருந்து ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் எடுத்து வந்தார்.
பின், கெடிலத்தில் உள்ள ஒரு வங்கி ஏ.டி.எம்., மையத்தில் இருந்து 50 ஆயிரம் ரூபாய் எடுத்து மொத்தம் 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாயை டேங்க் கவரில் வைத்துச் சென்றார்.
கெடிலத்தில் உள்ள ஒரு கடைக்கு முன் பைக்கை நிறுத்தி விட்டு உள்ளே சென்ற, சிறிது நேரத்தில் திரும்பி வந்து பார்த்தபோது, டேங்க் கவரில் வைத்திருந்த பணம் கொள்ளைபோனது தெரியவந்தது.
இதுகுறித்து, ரவிக்குமார் அளித்த புகாரின் பேரில், திருநாவலுார் போலீசார், வழக்குப் பதிந்து பணத்தை கொள்ளையடித்த மர்ம நபரைத் தேடி வருகின்றனர்.

