/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
குடிநீர் வழங்காததை கண்டித்து சாலை மறியல்
/
குடிநீர் வழங்காததை கண்டித்து சாலை மறியல்
ADDED : பிப் 02, 2024 11:37 PM
சங்கராபுரம்- சங்கராபுரம் அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சங்கராபுரம் அடுத்த அரசம்பட்டு காலனி பகுதியில் கடந்த 2 நாட்களாக குடிநீர் குழாய் உடைந்ததால் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டது. இதனை கண்டித்து நேற்று காலை 10:00 மணியளவில் சங்கராபுரம் சாலையில் கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த சப் இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி மற்றும் போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
உடனடியாக குடிநீர் குழாயை சரி செய்து குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
அதன் பேரில் 10:30 மணியளவில் அனைவரும் கலைந்து சென்றனர். இந்த மறியலால் அப்பகுதியில் 30 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.

