/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மலை கிராம மக்களின் கல்வி தாகத்தை போக்கும் புதுப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளி
/
மலை கிராம மக்களின் கல்வி தாகத்தை போக்கும் புதுப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளி
மலை கிராம மக்களின் கல்வி தாகத்தை போக்கும் புதுப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளி
மலை கிராம மக்களின் கல்வி தாகத்தை போக்கும் புதுப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளி
ADDED : அக் 26, 2025 05:01 AM

புதுப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி, மலைவாழ் மற்றும் மலை அடிவாரத்தைச் சேர்ந்த 15க்கும் மேற்பட்ட கிராம மாணவர்களின் வாழ்க்கை தரத்தினை உயர்த்தியதோடு மட்டுமின்றி, கல்வி தாக்கத்தை போக்கும் வரப்பிரசாதமாக இப்பள்ளி உள்ளது என்றால் அது மிகையாகாது.
மூங்கில்துறைப்பட்டு அடுத்த புதுப்பட்டில் கடந்த 1983ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி அரசு உயர்நிலைப் பள்ளியாக துவங்கப்பட்டது. இப்பள்ளியில் ஆரம்பத்தில் 250 மாணவர்களைக் கொண்டு செயல்பட துவங்கியது. 4.80 ஏக்கர் பரப்பளவில் 2.50 ஏக்கர் இடத்தில் பள்ளி கட்டடம் கட்டப்பட்டுள்ளது.
ஆரம்ப காலத்தில் 2 கூரை கொட்டகையுடன் துவங்கப்பட்ட இப்பள்ளி 1995ம் ஆண்டு தரைத்தளம் மற்றும் முதல் தளம் கொண்டதாக புதிய கட்டடம் கட்டப்பட்டது. தொடர்ந்து 2000ம் ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி இப்பள்ளி மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. தற்போது இப்பள்ளியில் 730 மாணவ, மாணவியர்கள் படித்து வருகின்றனர்.
மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டபோது, முதலில் 42 மாணவர்கள் மட்டுமே பயின்றனர். தற்போது 236 மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளி 4 வளாகம் கொண்ட கட்டடங்கள் கட்டப்பட்டு ஏ, பி, சி, டி என 4 பகுதியாக பிரிக்கப்பட்டு 26 வகுப்பறைக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
கடந்த 2022ம் ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 92 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர். அதே போல் 2017ம் ஆண்டு பிளஸ் 2 தேர்வில் 94 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்று பெருமை சேர்த்தனர்.
இப்பள்ளியில் அதிகப்படியான மாணவர்கள் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். பள்ளியில் படித்த பெரும்பாலான மாணவர்கள் பொறியாளராகவும், மருத்துவராகவும், வழக்கறிஞர்களாகவும், போக்குவரத்து துறையிலும், காவல்துறையிலும், ராணுவத்திலும், தொழிலதிபராகவும், கலைத்துறையிலும், வெளிநாடுகளிலும், அரசியல்வாதிகளாகவும் மற்றும் ஆசிரியர்கள் என பல்வேறு துறைகளில் உள்ளனர்.
இவ்வாறு இப்பள்ளி 42 ஆண்டுகளாக திறமையான மாணவ, மாணவியர்களை உருவாக்கியுள்ளது. இப்பள்ளி விவசாயிகள் மற்றும் மலை வாழ் கிராம மக்களின் கல்வி தாக்கத்தைப் போக்க உருவானதை பெரும் பொக்கிஷமாக இப்பகுதி மக்கள் கருதுகின்றனர்.
இப்பள்ளியில் படித்த மாணவர்கள் சிலர் இப்பள்ளியிலே ஆசிரியர்களாக பணிபுரிந்து வருகின்றனர் என பெருமையாக கூறுகின்றனர்.
ஆரம்ப காலத்தில் இப்பகுதியில் அதிகப்படியான போக்குவரத்து வசதி இல்லாத போதும் மாணவர்கள் பல மைல் துாரம் நடந்தும், சைக்கிளிலும் வந்து படித்து வாழ்க்கையில் வெற்றி பெற்றுள்ளனர்.
இப்பள்ளி மலை கிராமங்களான மூலக்காடு, கொடியனுார், வஞ்சுக்குழி, பாப்பாத்தி மூளை, மல்லாபுரம் மற்றும் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இலக்கிநாயக்கன்பட்டி, புளியங்கோட்டை, ரங்கப்பனுார், புதுப்பேட்டை, ராவத்தநல்லுார், பவுஞ்சிப்பட்டு போன்ற கிராம மக்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக உள்ளது என்றால் அது மிகையாகாது.
ஆசிரியர்களின் ஒத்துழைப்புடன்
செயல்பட்டு வருகிறேன்
சங்கராபுரம் பள்ளியில் முதுகலை ஆசிரியராக பணிபுரிந்த நான் கடந்த 6 மாதங்களுக்கு முன் பதவி உயர்வு பெற்று தலைமையாசிரியராக இப்பள்ளியில் பணிபுரிந்து வருகிறேன். இப் பள்ளியில் உள்ள 4 பிளாக்குகளில் 1 பிளாக்கில் மட்டும் மின்சார வசதி இல்லாமல் இருந்ததை அறிந்து மின்சாரம் வசதி ஏற்படுத்தவும், புதிய கழிவறை கட்டடம் கட்டுவதற்கும் ஏற்பாடு செய்தேன். மேலும், இப்பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை ஸ்மார்ட் லேப் வசதிகளை உருவாக்கியுள்ளேன். 10 ஆண்டுகளாக செயல்பாட்டில் இல்லாத நிலத்தடி போரினை சீரமைத்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வந்ததுடன் குடிநீர் தொட்டி அமைக்க ஏற்பாடு செய்தேன். 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை மாலை 4:00 மணி முதல் 5:00 மணி வரை சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகிறது. மாணவர்களுக்கு மொழித் திறனை மேம்படுத்த மாதம் ஒருமுறை மாணவருக்கு இலக்கிய மன்றம் நடத்தப்படுகிறது. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தினமும் காலை 5:00 மணிக்கு பொபைல் போன் மூலம் அழைப்பு விடுத்து அவர்களை எழுப்பி படிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்பகுதி மாலை வாழ் மாணவர்கள் வெற்றிக்காக இப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களின் ஒத்துழைப்புடன் செயல்பட்டு வருகிறேன். -மதியழகன், தலைமையாசிரியர்.

