/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கிராவல் மண் ஏற்றி சென்ற டிப்பர் லாரிகள் பொதுமக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு
/
கிராவல் மண் ஏற்றி சென்ற டிப்பர் லாரிகள் பொதுமக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு
கிராவல் மண் ஏற்றி சென்ற டிப்பர் லாரிகள் பொதுமக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு
கிராவல் மண் ஏற்றி சென்ற டிப்பர் லாரிகள் பொதுமக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு
ADDED : டிச 17, 2025 06:01 AM

ரிஷிவந்தியம்: சூளாங்குறிச்சியில் கிராவல் மண் ஏற்றி சென்ற டிப்பர் லாரிகளை பொதுமக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கள்ளக்குறிச்சி அடுத்த சூளாங்குறிச்சி மணிமுக்தா அணையில் இருந்து 25க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகளில் கிராவல் மண் ஏற்றி செல்லப்படுகிறது. கடந்த 10 நாட்களுக்கு மேலாக டிப்பர் லாரிகள் மண் ஏற்றிக் கொண்டு அணிவகுத்து செல்கின்றன. ஆரம்ப கட்டத்தில் கலெக்டர் அலுவலக கட்டுமானம் மற்றும் விழாமேடை அமைக்கும் பணிக்கு கிராவல் மண் கொண்டு செல்லப்பட்டது.
அங்கு பணிகள் முடிந்த நிலையில் தற்போது கள்ளக்குறிச்சி சுற்றுவட்டார பகுதிக்கு கிராவல் மண் ஏற்றி செல்லப்படுகிறது.
மணிமுக்தா அணையில் உரிய அனுமதியின்றி அள்ளப்படும் கிராவல் மண், ரியல் எஸ்டேட் பணிகளுக்காக வெளிமார்க்கெட்டில் விற்பனை செய்வதாக நேற்று தகவல் பரவியது. இதையடுத்து நேற்று காலை 11.45 மணியளவில் சூளாங்குறிச்சி வழியாக சென்ற 4க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகளை பொதுமக்கள் நிறுத்தி, வாக்குவாதம் செய்தனர்.
இதையறிந்த, மற்ற லாரி ஓட்டுநர்கள் வாகனத்தை வேறுவழியாக இயக்கினர்.
தகவலறிந்த வருவாய்த்துறை மற்றும் தியாகதுருகம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சு வார்த்தை நடத்தினர். அதில், கிராவல் மண் அள்ளியதில் ஒரு தரப்பினர் அனுமதி பெற்றிருப்பதாகவும், மற்றொரு தரப்பினர் கலெக்டர் அலுவலக திறப்பு விழா 'பார்க்கிங்' பணிகளுக்கு கொண்டு செல்வதாகவும் தெரி வித்தனர்.
இதையடுத்து வாகனங்கள் விடுவிக்கப்பட்டது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

