/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
திருக்கோவிலுார் தொகுதியை முரசு மீண்டும் வென்றெடுக்கும் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு
/
திருக்கோவிலுார் தொகுதியை முரசு மீண்டும் வென்றெடுக்கும் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு
திருக்கோவிலுார் தொகுதியை முரசு மீண்டும் வென்றெடுக்கும் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு
திருக்கோவிலுார் தொகுதியை முரசு மீண்டும் வென்றெடுக்கும் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு
ADDED : ஆக 23, 2025 11:13 PM
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் தொகுதியை மீண்டும் முரசு வென்றெடுக்கும் என பிரேமலதா பேசினார்.
தே.மு.தி.க., சார்பில் 'உள்ளம் தேடி, இல்லம் நாடி' பிரச்சாரப் பயணத்தின் ஒரு பகுதியாக பொதுச் செயலாளர் பிரேமலதா நேற்று முன்தினம் திருக்கோவிலுாரில் தொண்டர்களை சந்தித்து உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் தலைமையில் நடந்த கூட்டத்தில் பிரேமலதா பேசியதாவது;
விழுப்புரம் என்றால் விஜயகாந்தின் கோட்டை. அதேபோல் திருக்கோவிலுார் என்றாலே விஜயகாந்தின் அசைக்க முடியாத கோட்டை. 'உள்ளம் தேடி, இல்லம் நாடி' என உங்களை தேடி வந்திருக்கிறோம். தமிழ்நாட்டை ஆண்ட ராஜராஜ சோழன், பல்லவ மன்னர்கள், பாண்டிய மன்னவர்கள் வரிசையில் பல முதல்வர்கள் ஆட்சி செய்துள்ளனர்.
ஆனால் அவர்களுக்கெல்லாம் மக்கள் தேரை பரிசாக கொடுத்து பார்த்திருக்கிறீர்களா? இல்லை. அது, நமது விஜயகாந்துக்கு மட்டும் தான் நடந்திருக்கிறது. இலங்கை தமிழ் மக்களால் அவருக்கு தேர் பரிசாக வழங்கப்பட்டிருக்கிறது.
இந்த கட்சியை லஞ்ச லாவண்யம் இல்லாத, நேர்மையான ஆட்சியாக கொண்டு வர வேண்டும் என விரும்பினார், படித்த, படிக்காத மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு, இலவச கல்வி, மருத்துவம் என சொன்ன தலைவர் விஜயகாந்த். அவர் கண்ட கனவு நிறைவேற்ற நாம் பாடுபட வேண்டும்.
கடந்த 10 ஆண்டு காலமாக இந்த தொகுதியின் எம்.எல்.ஏ., வாக இருப்பவர் 'ஓசி, ஓசி பஸ்' என்கிறார். ஓசி பஸ் என்ன உங்க அப்பன் வீட்டு சொத்தா? மக்களின் வரிப்பணத்தில் என் தாய்மார்களுக்கு தரப்பட்ட பஸ் அது. ஓசி பஸ் என்று சொல்கிற அருகதை யாருக்கும் இல்லை. ஏற்கனவே 2011ல் நாம் வென்றெடுத்த தொகுதி இது. மீண்டும் திருக்கோவிலுார் தொகுதியில் முரசு வென்றெடுக்க வேண்டும்.
இவ்வாறு பிரேமலதா பேசினார்.