/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சாலையை மறைக்கும் செடிகள் விபத்து அபாயம்
/
சாலையை மறைக்கும் செடிகள் விபத்து அபாயம்
ADDED : ஜூலை 29, 2025 07:30 AM

ரிஷிவந்தியம் : சூளாங்குறிச்சி அருகே சாலையை மறைக்கும் வகையில் வளர்ந்துள்ள செடிகளால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
ரிஷிவந்தியம் அடுத்த சூளாங்குறிச்சியில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு செல்லும் சாலையில், மணிமுக்தா ஆற்றுப்பாலம் அருகே சாலையின் இருபுறமும் அதிகளவு செடி கொடிகள் வளர்ந்துள்ளது. குறிப்பாக, வளைவு பகுதியில் சாலையை மறைக்கும் அளவிற்கு செடிகள் வளர்ந்துள்ளதால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் வளைவு அருகே எதிரில் வரும் வாகனம் தெரியாமல் சிரமப்படுகின்றனர்.
செடி புதர்கள் மீது உரசாமல் செல்ல வேண்டும் என்பதற்காக கார், பஸ் உள்ளிட்ட வாகனங்கள் சாலையின் நடுவே செல்வதால், எதிர்திசையில் வரும் வாகன ஓட்டிகள் அச்சமடைகின்றனர்.
விபத்து ஏற்படும் முன், சாலையை மறைக்கும் செடி, புதர்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

