/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மருந்து வணிகர்கள் சங்க பொதுக்குழு கூட்டம்
/
மருந்து வணிகர்கள் சங்க பொதுக்குழு கூட்டம்
ADDED : டிச 24, 2025 05:44 AM

சங்கராபுரம்: கள்ளக்குறிச்சியில் மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கத்தின் 5ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு சங்க தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர்கள் தட்சணாமூர்த்தி, செங்குட்டுவன், அமைப்பு செயலாளர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட செயலாளர் மதியழகன் வரவேற்றார். பொருளாளர் முத்துக்கருப்பன் நிதிநிலை அறிக்கை சமர்ப்பித்தார்.
திருக்குறள் பேரவை செயலாளர் லட்சுமிபதி 'மருத்துவ சேவை; மகேசன் சேவை' தலைப்பில் பேசினார். அனைத்து வணிகர்கள் சங்க தலைவர் செல்வகுமார், செயலாளர் ஜெயக்குமார், சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் ஸ்ரீதரன் சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில், சங்க வளர்ச்சி பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மாவட்ட இணை செயலாளர் வெங்கடேசன், வேல்முருகன், மொத்த மருந்து பிரிவு தலைவர் செல்வராஜ், மக்கள் தொடர்பு தலைவர் சேகர், தாலுகா சங்க தலைவர்கள் பழனிவேல், நாச்சியப்பன், மோகன சுரேஷ்குமார், விவேகானந்தன், ஜெகன் நடராஜன், சரவணன், துரை உட்பட பலர் பங்கேற்றனர். சக்திகுமார் நன்றி கூறினார்.

