/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
நாகலுார் துணை மின்நிலையத்தில் புதிய டிரான்ஸ்பார்மர் இயக்கி வைப்பு
/
நாகலுார் துணை மின்நிலையத்தில் புதிய டிரான்ஸ்பார்மர் இயக்கி வைப்பு
நாகலுார் துணை மின்நிலையத்தில் புதிய டிரான்ஸ்பார்மர் இயக்கி வைப்பு
நாகலுார் துணை மின்நிலையத்தில் புதிய டிரான்ஸ்பார்மர் இயக்கி வைப்பு
ADDED : செப் 07, 2025 05:37 AM

கள்ளக்குறிச்சி: நாகலுார் துணைமின் நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மின்மாற்றியை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.
நாகலுார் துணை மின்நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மின்நுகர்வோர் எண்ணிக்கை நாளுக்குள் நாள் அதிகரித்து வருவதால், மின்சார தேவையும் அதிகரித்துள்ளது. இதையடுத்து, துணை மின்நிலையத்தில் உள்ள 10 எம்.வி.ஏ., திறன் கொண்ட டிரான்ஸ்பார்மர், 16 மெகா வோல்ட் ஆம்பியராக மேம்படுத்தப்படுத்தும் பணிகள் கடந்த சில தினங்களுக்கு முன் நடந்தது. பணிகள் முடிவடைந்த நிலையில், புதிய டிரான்ஸ்பார்மர் துவக்க நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு மின்வாரிய தலைமை பொறியாளர் பழனிராஜூ தலைமை தாங்கி, டிரான்ஸ்பார்மர் இயக்கி வைத்தார். மேற்பார்வை பொறியாளர் (பொறுப்பு) மயில்வாகணன், செயற்பொறியாளர்கள் கணேசன், சுப்புராஜ், திலகர் முன்னிலை வகித்தனர். உதவி செயற்பொறியாளர்கள் கேசவேல், கோபிநாத், மோகன், ராஜா, உதவி மின் பொறியாளர்கள் நவநீதகிருஷ்ணன், அழகன், ரியாஸ், பிரசாத், முருகானந்தம் மற்றும் பணியாளர்கள் பலர் உடனிருந்தனர்.