/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சிக்கு முதல்வர் வருகை; ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் ஆய்வு
/
கள்ளக்குறிச்சிக்கு முதல்வர் வருகை; ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் ஆய்வு
கள்ளக்குறிச்சிக்கு முதல்வர் வருகை; ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் ஆய்வு
கள்ளக்குறிச்சிக்கு முதல்வர் வருகை; ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் ஆய்வு
ADDED : டிச 25, 2025 06:39 AM

கள்ளக்குறிச்சி: தமிழக முதல்வர் ஸ்டாலின் வருகையொட்டி விழா முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக அமைச்சர் வேலு ஆய்வு செய்தார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின், கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு நாளை (26ம் தேதி) வருகிறார். வீரசோழபுரத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள கலெக்டர் அலுவலகத்தை திறந்து வைத்து, அரசின் பல்வேறு துறைகள் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். முன்னதாக கள்ளக்குறிச்சி ஏமப்பேர் ரவுண்டானா பகுதியில் புதியதாக நிறுவப்பட்டுள்ள கருணாநிதி வெண்கல சிலையை திறந்து வைக்கிறார்.
இதனையொட்டி விழா முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக அமைச்சர் வேலு நேற்று ஆய்வு செய்து, நிகழ்ச்சிக்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள், பாதுகாப்பு குறித்து ஆலோசனை வழங்கினார்.
அப்போது கலெக்டர் பிரசாந்த், தி.மு.க., மாவட்ட செயலாளர்கள் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., உதயசூரியன் எம்.எல்.ஏ., மலையரசன் எம்.பி., எஸ்.பி.,மாதவன், நகர சேர்மன் சுப்ராயலு, தி.மு.க., மாவட்ட அவை தலைவர் ராமமூர்த்தி, துணை செயலாளர் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர்கள் நெடுஞ்செழின், அண்ணாதுரை, மற்றும் அரசு துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
தொடர்ந்து வீரசோழபுரத்தில் புதிய கலெக்டர் அலுவலகம் திறப்பு விழா பணிகள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மேடை பணிகளையும் பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார்.

