/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
எலவனாசூர்கோட்டை பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கல்
/
எலவனாசூர்கோட்டை பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கல்
எலவனாசூர்கோட்டை பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கல்
எலவனாசூர்கோட்டை பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கல்
ADDED : டிச 23, 2025 07:18 AM

உளுந்தூர்பேட்டை: எலவனாசூர்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
உளுந்துார்பேட்டை மணிகண்ணன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி எலவனாசூர்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 212 பேருக்கு அரசின் விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.
ஒன்றிய சேர்மன் ராஜவேல் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் மெய்யப்பன் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் நந்தகுமார், துணைத் தலைவர் சம்சாத், கவுன்சிலர்கள் மனோகரன், சர்தார், மாவட்ட கவுன்சிலர் பாண்டியன், ஆசிரியர்கள் வெங்கடேசன், லியோ ஜஸ்டின், உடற்கல்வி ஆசிரியர் சித்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சிவக்குமார் நன்றி கூறினார்.