/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சியில் தி.மு.க., பொதுக்கூட்டம்
/
கள்ளக்குறிச்சியில் தி.மு.க., பொதுக்கூட்டம்
ADDED : மார் 08, 2024 12:01 PM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
மந்தைவெளியில் நடந்த கூட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். நகர செயலாளர் சுப்ராயலு வரவேற்றார். கொள்கை பரப்பு இணைச் செயலாளர் புகழேந்தி, முன்னாள் மத்திய இணை அமைச்சர் வேங்கடபதி, விவசாய அணி துணைச் செயலாளர் சித்தார்த்தன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் முருகன், எத்திராசு சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில், மாவட்ட அவைத் தலைவர் ராமமூர்த்தி, துணைச் செயலாளர்கள் காமராஜ், புவனேஸ்வரி பெருமாள், கோவிந்தராஜ், பொதுக்குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன், ராஜி, மஞ்சுளா கணேசன், நகர செயலாளர்கள் மலையரசன், ஜெய்கணேஷ்.
ஒன்றிய செயலாளர்கள் பெருமாள், நெடுஞ்செழியன், சத்தியமூர்த்தி, அண்ணாதுரை, ராஜேந்திரன், அய்யனார், கிருஷ்ணமூர்த்தி, துரைமுருகன், பாரதிதாசன், அசோக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர். ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் நன்றி கூறினார்.

