/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம்
/
தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம்
ADDED : டிச 21, 2025 06:20 AM

ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் கிழக்கு ஒன்றிய தி.மு.க., செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
மணலுார்பேட்டையில் நடந்த கூட்டத்திற்கு தி.மு.க., ஒன்றிய செயலாளர் பாரதிதாசன் தலைமை தாங்கி பேசியதாவது: கள்ளக்குறிச்சியில் கலெக்டர் அலுவலகம் மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவச்சிலை திறப்பதற்காக வரும் 26ம் தேதி வருகை தரும் முதல்வர் ஸ்டாலினுக்கு, கிழக்கு ஒன்றிய தி.மு.க., சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும், கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள் திரளாக பங்கேற்க வேண்டும், எஸ்.ஐ.ஆர்., பணிக்கு பிறகு வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் விடுபட்ட வாக்காளர்கள், 18 வயது நிரம்பிய இளம் வாக்காளர்களையும் கண்டறிந்து வாக்காளர் பட்டியலில் இணைக்க உதவி செய்ய வேண்டும், ரிஷிவந்தியம் சட்டசபை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை அதிக ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும் என கூறனார்.
கூட்டத்தில், தி.மு.க., ஒன்றிய அவைத்தலைவர் பாலகிருஷ்ணன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராஜிவ்காந்தி, மாவட்ட பிரதிநிதிகள் கிருஷ்ணமூர்த்தி, துளசிங்கம், குபேந்திரன், பிற அணி மாவட்ட நிர்வாகிகள் முத்துவீரன், தண்டபாணி, ராஜ், திருமலை மற்றும் ஒன்றிய, கிளை நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

