/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அதிகாரிகளிடம் தகராறு: 8 பேர் மீது வழக்கு
/
அதிகாரிகளிடம் தகராறு: 8 பேர் மீது வழக்கு
ADDED : அக் 27, 2025 12:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னசேலம்:  சின்னசேலம் தாசில்தார் பாலகுரு தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் கடந்த 16 ஆம் தேதி நைனார்பாளையம் அடுத்துள்ள பாத்திமாபாளையம் கிராமத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்றனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து வருவாய்த்துறை அதிகாரிகளுடன் சிலர் தகராறில் ஈடுபட்டனர்.
இது குறித்து நைனார்பாளையம் வி.ஏ.ஓ., ரங்கசாமி அளித்த புகாரின் பேரில் பாத்திமாபாளையம் கிராமத்தைச் சேர்ந்த சேர்ந்த ரோஸி, அந்தோணியம்மாள், ஆரோக்கியதாஸ், அந்தோணிமுத்து, பிரான்சிஸ், ஆரோக்கியதாஸ், தனிஷ், அந்தோணி ஆகிய 8 பேர் மீது கீழ்க்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

