sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

உளுந்துார்பேட்டையில் வளர்ச்சி பணிகள்: கலெக்டர் ஆய்வு

/

உளுந்துார்பேட்டையில் வளர்ச்சி பணிகள்: கலெக்டர் ஆய்வு

உளுந்துார்பேட்டையில் வளர்ச்சி பணிகள்: கலெக்டர் ஆய்வு

உளுந்துார்பேட்டையில் வளர்ச்சி பணிகள்: கலெக்டர் ஆய்வு


ADDED : ஏப் 18, 2025 05:15 AM

Google News

ADDED : ஏப் 18, 2025 05:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை: உளுந்தூர்பேட்டையில் நடந்து வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டையில் பொதுப்பணித்துறை சார்பில் 'உங்களைத்தேடி உங்கள் ஊரில்' திட்டத்தின் கீழ் ரூ.4.37 கோடி மதிப்பில் பயணியர் ஆய்வு மாளிகை கட்டப்பட்டு வருகிறது. இதன் கட்டுமான பணிகளை கலெக்டர் பிரசாந்த் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து உளுந்துார்பேட்டை, அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.20 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் அவசர சிகிச்சைப்பிரிவு கட்டடம், ஆய்வக கட்டடம் மற்றும் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், ரூ.4.94 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்படும் பள்ளி வகுப்பறை கட்டட பணிகளை ஆய்வு செய்தார்.

மேலும் நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் உரம் தயாரிக்கும் மையத்தை ஆய்வு செய்து, நகராட்சியை துாய்மையாக வைத்திருக்க அவர் உத்தரவிட்டார்.

அணைக்கட்டு ஆய்வு


இதையடுத்து திருநாவலுார் முதல் உடையநத்தம் சாலை வரை கெடிலம் ஆற்றின் குறுக்கே நபார்டு திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்படும் உயர்மட்ட பால பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார். அவரின், முன்னிலையில், பாலத்தின் தாங்கும் திறன் பரிசோதிக்கப்பட்டது.

அடுத்து, உ.செல்லுார் கிராமம் சேஷ நதியின் குறுக்கே கட்டப்படும் புதிய அணைக்கட்டு பணி ஆய்வு செய்யப்பட்டது. இதன்மூலம் பாதுார் மற்றும் களவனுார் ஏரிகள் நிரம்பி, 607 ஏக்கர் விவசாய நிலம் முழுமையாக பாசன வசதி பெறும். இந்த பணிகளை தரமாகவும் விரைவாகவும் முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

அங்கன்வாடிக்கு புதிய கட்டடம்


தொடர்ந்து திருநாவலூர் வட்டாரம் மேட்டுப்பாச்சப்பாளையம், காம்பட்டு ஆகிய கிராமங்களில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

மையங்களில் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை, உணவுகள், குழந்தைகளின் எடை, உயரம் மற்றும் பிற சேவைகள் குறித்து விரிவாகக் கேட்டறிந்த கலெக்டர், அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டடம் கட்டுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

ஆய்வின்போது பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் செல்வக்குமார், உதவி செயற்பொறியாளர் ராஜீவ், நகர்மன்றத் தலைவர் திருநாவுக்கரசு, நகராட்சி ஆணையர் இளவரசன், பணி மேற்பார்வையாளர் சாம்பசிவம், உதவி செயற் பொறியாளர் தேவராணி, உதவி பொறியாளர் சரவணன், தாசில்தார் அனந்தகிருஷ்ணன், நீர்வளத் துறை உதவிப்பொறியாளர் மோகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us