/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பாலின பாகுபாட்டிற்கு எதிரான விழிப்புணர்வு சுவரொட்டி: கலெக்டர் துவக்கிவைப்பு

ADDED : டிச 12, 2024 07:09 AM

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் மகளிர் திட்டம் சார்பில் பாலின பாகுபாட்டிற்கு எதிரான விழிப்புணர்வு சுவரொட்டிகள் ஒட்டி, நிகழ்ச்சியினை கலெக்டர் துவக்கி வைத்தார்.
மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பாலின பாகுபாட்டிற்கு எதிரான பிரசாரம் 3.0 நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக அனைத்து ஊராட்சிகளில் உள்ள அரசு அலுவலக கட்டடங்களில் பாலின பாகுபாட்டிற்கு எதிரான விழிப்புணர்வு சுவரொட்டிகள் ஒட்டும் நிகழ்ச்சியை கலெக்டர் அலுவலகத்தில் விழிப்புணர்வு சுவரொட்டி ஒட்டி கலெக்டர் துவக்கி வைத்தார்.
தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதிலும் உள்ள அனைத்து ஊராட்சிகளில் உள்ள அரசு அலுவலகக் கட்டடங்களிலும் பாலின பாகுபாட்டிற்கு எதிரான விழிப்புணர்வு சுவரொட்டிகள் ஒட்டப்பட உள்ளது.
இதில் மகளிர் திட்ட இயக்குநர் சுந்தர்ராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.