ADDED : டிச 26, 2025 05:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் நல்லாயன் தேவாலயத்தில், நேற்று முன்தினம் நள்ளிரவு கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாடு நடந்தது.
பாதிரியார் அருண் டேவிட் தலைமை தாங்கினார். பாதிரியார் ஹென்றி எழில்மாறன் வரவேற்று, கிறிஸ்து பிறப்பு சிறப்பு திருப்பலியை நிறைவேற்றி ஆசிர்வதித்தார். தேவாலய வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த குடிலில் குழந்தை இயேசு பிறப்பு நிகழ்வுகள் நடத்திக் காண்பிக்கப்பட்டன.
இயேசு பிறப்பு பெருவிழா பாடல்கள், கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
காலை 9:00 மணிக்கு சிறப்பு திருப்பலி ஆராதனை நடந்தது. ஆசிரியர் பால்ஆரோக்கியராஜ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

