sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

இருவரை தாக்கிய நால்வர் மீது வழக்கு சி.சி.டி.வி., காட்சி வைரலால் பரபரப்பு

/

இருவரை தாக்கிய நால்வர் மீது வழக்கு சி.சி.டி.வி., காட்சி வைரலால் பரபரப்பு

இருவரை தாக்கிய நால்வர் மீது வழக்கு சி.சி.டி.வி., காட்சி வைரலால் பரபரப்பு

இருவரை தாக்கிய நால்வர் மீது வழக்கு சி.சி.டி.வி., காட்சி வைரலால் பரபரப்பு


ADDED : ஆக 24, 2025 03:36 AM

Google News

ADDED : ஆக 24, 2025 03:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் வணிக வளாகத்தில் இருந்து வெளியே வந்த இருவரை சராமாரியாக தாக்கிய அடையாளம் தெரியாத நால்வர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

திருக்கோவிலுார் அடுத்த அரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாவாடை மகன் காத்தவராயன், 25; கொளப்பாக்கம் தனியார் பள்ளி டிரைவர். கடந்த 21ம் தேதி வேனை நிறுத்திவிட்டு உடன் பணியாற்றும் ஆவிகொளப்பாக்கம் சக்ரவர்த்தி மகன் ஆனந்த், 38; இருவரும் திருக்கோவிலுார் மருத்துவமனை சாலை தனியார் வணிக வளாகத்தில் பொருட்கள் வாங்கிக் கொண்டு வெளியில் வந்தனர். அங்கு தயாராக நின்றிருந்த அடையாளம் தெரியாத 4 பேர் காத்தவராயன் மற்றும் ஆனந்தை சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

தாக்குதல் சம்பவம் பற்றிய சி.சி.டி.வி., காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. காத்தவராயன் கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலுார் போலீசார் அடையாளம் தெரியாத 4 பேர் மீதும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

மக்கள் நடமாட்டம் மிகுந்த பொது இடத்தில் நடந்த தாக்குதல் சம்பவம் குறித்த காட்சி பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






      Dinamalar
      Follow us