/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
நீலமங்கலம் கிராமத்தை தத்தெடுத்த ஏ . கே . டி ., பொறியியல் கல்லுாரி
/
நீலமங்கலம் கிராமத்தை தத்தெடுத்த ஏ . கே . டி ., பொறியியல் கல்லுாரி
நீலமங்கலம் கிராமத்தை தத்தெடுத்த ஏ . கே . டி ., பொறியியல் கல்லுாரி
நீலமங்கலம் கிராமத்தை தத்தெடுத்த ஏ . கே . டி ., பொறியியல் கல்லுாரி
ADDED : ஆக 25, 2025 04:11 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி ஏ.கே.டி. நினைவு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி என்.எஸ்.எஸ்., சார்பில் நீலமங்கலம் கிராமத்தில், தத்தெடுப்பு மற்றும் வளர்ச்சி திட்டம் நிகழ்ச்சி நடந்தது.
ஏ.கே.டி., கல்லுாரி முதல்வர் சிவகுமரன் தலைமை தாங்கினார். வி.ஏ.ஓ., ராமசந்திரன், ஊராட்சி தலைவர் ஜெய்சங்கர் முன்னிலை வகித்தனர். இயந்திர பொறியியல் துறை ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் முன்னிலையில் நீலமங்கலம் கிராமம் தத்தெடுக்கப்பட்டது.
திட்டத்தின் ஒரு பகுதியாக நீலமங்கலம் கிராம பகுதியை என்.எஸ்.எஸ். மாணவர்கள் சுத்தம் செய்தனர். அத்துடன் கிராம மக்களுக்கு சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதன் மூலம் கல்லுாரி மற்றும் கிராம மக்களிடையே நல்லிணக்கத்தை வலுப்படுத்தியதோடு, மாணவர்களின் சமூகப் பொறுப்பு வெளிப்பட்டது என கல்லுாரி முதல்வர் சிவகுமரன் தெரிவித்தார்.