/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கட்டுமானத்துறையில் சாதனை ஏ.எஸ்.ஆர்., கன்ஸ்ட்ரக் ஷன்
/
கட்டுமானத்துறையில் சாதனை ஏ.எஸ்.ஆர்., கன்ஸ்ட்ரக் ஷன்
கட்டுமானத்துறையில் சாதனை ஏ.எஸ்.ஆர்., கன்ஸ்ட்ரக் ஷன்
கட்டுமானத்துறையில் சாதனை ஏ.எஸ்.ஆர்., கன்ஸ்ட்ரக் ஷன்
ADDED : அக் 11, 2024 11:10 PM

திருக்கோவிலுார் ஏ.எஸ்.ஆர்., கன்ஸ்ட்ரக் ஷன் நேர்மையை மூலதனமாக கொண்டு கட்டுமானத் துறைகளில் முத்திரை பதித்து வருகிறது.
இதுகுறித்து நிர்வாகி பாரதி கூறியதாவது: கட்டுமானத்துறையில் பட்டய படிப்பு முடித்து தனது நீண்டநாள் அனுபவத்தின் வாயிலாக அரசு கட்டடங்கள்‚ மருத்துவமனை‚ பள்ளிகள்‚ பஸ் நிலையம்‚ நீச்சல் குளம்‚ அரசு குடியிருப்புகள் உள்ளிட்ட பல்வேறு கட்டுமானப் பணிகளை திறம்பட மேற்கொண்டு வருகிறோம்.
தனியார் கட்டுமானத்திலும் கால்பதித்து ஒப்பந்த அடிப்படையில் கட்டட வரைபடத்தில் துவங்கி‚ வடிவமைப்பு, உள் அலங்காரம்‚ வெளி அலங்காரம்‚ வாஸ்து முறைப்படி கற்பனைக்கேற்ற அழகிய வீடுகளை கட்டிக் கொடுக்கும் எங்கள் நிறுவனம் வாடிக்கையாளர்களின் விருப்பத்தை அறிந்து குறிப்பிட்ட காலக் கெடுவிற்குள்‚ தரமாக பணியை மேற்கொள்கிறோம்.
இது மட்டுமல்லாமல் கோவில்கள்‚ பழங்கால கட்டடங்கள் பழமை மாறாமல் நவீன முறையில் புதுப்பிக்கும் திறமையான தொழிலாளர்களை கொண்டிருப்பதால்‚ இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மேற்கொள்ளப்படும் புனரமைப்பு பணிகளையும் எங்கள் நிறுவனம் சிறப்பாக செய்து வருகிறது.
கட்டுமானத்துறையில் எங்களின் சிறந்த சேவையை பாராட்டி பல்வேறு நிறுவனங்கள் சார்பில் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பாரதி கூறினார்.

