/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 67 போலீசார் பணியிட மாற்றம்
/
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 67 போலீசார் பணியிட மாற்றம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 67 போலீசார் பணியிட மாற்றம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 67 போலீசார் பணியிட மாற்றம்
ADDED : அக் 26, 2025 05:05 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 12 சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் உட்பட 67 போலீசாரை பணியிட மாற்றம் செய்து எஸ்.பி., உத்தரவிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் காவல் நிலையத்தில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த அந்தோணிகுரூஸ், சங்கராபுரம் காவல் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
அதேபோல், சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக ஆயுதப்படையில் பணிபுரிந்த பாபுஅந்தோணிமுத்து, சந்தியாகு முறையே கள்ளக்குறிச்சி மற்றும் ரிஷிவந்தியத்திற்கும், சின்னசேலத்தில் பணிபுரிந்த கண்ணன் கச்சிராயபாளையத்திற்கும் மாற்றம் செய்யப்பட்டனர்.
சின்னசேலத்தில் பணிபுரிந்த செந்தில்குமார் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவுக்கும், கரியாலுாரில் பணிபுரிந்த பாண்டியன் மாவட்ட குற்ற பிரிவுக்கும், சங்கராபுரத்தில் பணிபுரிந்த முகமதுமுஸ்தபா கீழ்குப்பத்திற்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல், சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக திருக்கோவிலுாரில் பணிபுரிந்த குமார் திருப்பாலபந்தலுக்கும், மாவட்ட குற்றப்பிரிவில் பணிபுரிந்த செந்தில் அதே அலுவலகத்தில் மற்றொரு பிரிவுக்கும் மாற்றப்பட்டனர்.
வரஞ்சரத்தில் பணிபுரிந்த பிரபு சின்னசேலத்திற்கும், மணலுார்பேட்டையில் பணிபுரிந்த திருமலைராஜன் ரிஷிவந்தியத்திற்கும், பகண்டைகூட்ரோட்டில் பணிபுரிந்த நாராயணசாமி ரிஷிவந்தியத்திற்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
மேலும், 22 தலைமைக் காவலர்கள், 32 முதல்நிலைக் காவலர், ஒரு இரண்டாம் நிலைக் காவலர் வெவ்வேறு காவல் நிலையங்களுக்க மாற்றப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுதும் 67 போலீசாரை பணியிட மாற்றம் செய்து எஸ்.பி., மாதவன் உத்தரவிட்டுள்ளார்.

