/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கனவு இல்ல வீடு கட்ட அனுமதி ஆணை வழங்கல்
/
கனவு இல்ல வீடு கட்ட அனுமதி ஆணை வழங்கல்
ADDED : ஆக 11, 2024 07:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம், : சங்கராபுரத்தில் கலைஞர் கனவு இல்ல திட்ட பயனாளிகளுக்கு வீடு கட்ட அனுமதி ஆணை வழங்கும் விழா நடந்தது.
ஒன்றிய அலுவலக வளாகத்தில் நந்த விழாவிற்கு, உதயசூரியன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். ஒன்றிய சேர்மன் திலகவதி நாகராஜன், பி.டி.ஓ.,க்கள் மோகன்குமார், செல்வ போதகர், ஆவின் சேர்மன் ஆறுமுகம் முன்னிலை வகித்தனர்.
சங்கராபுரம் ஒன்றியத்தில் 21 ஊராட்சிகளைச் சேர்ந்த 215 பேருக்கு கனவு இல்லம் கட்ட அனுமதி ஆணை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் 21 ஊராட்சி தலைவர்கள், துணைத் தலைவர்கள், பயனாளிகள், ஊராட்சி செயலர்கள், ஒன்றிய பொறியாளர்கள் பங்கேற்றனர்.

