/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தற்காலிக சட்ட தன்னார்வலர்களுக்கு வரும் 28ம் தேதி நேர்முகத் தேர்வு
/
தற்காலிக சட்ட தன்னார்வலர்களுக்கு வரும் 28ம் தேதி நேர்முகத் தேர்வு
தற்காலிக சட்ட தன்னார்வலர்களுக்கு வரும் 28ம் தேதி நேர்முகத் தேர்வு
தற்காலிக சட்ட தன்னார்வலர்களுக்கு வரும் 28ம் தேதி நேர்முகத் தேர்வு
ADDED : மே 19, 2024 06:23 AM
கள்ளக்குறிச்சி : விழுப்புரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சட்ட தன்னார்வலர்களுக்கான நேர்முக தேர்வு வரும் 28 ம் தேதி நடக்கிறது.
இது குறித்து விழுப்புரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட நீதிபதியுமான பூர்ணிமா விடுத்துள்ள செய்திகுறிப்பு;
விழுப்புரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் சட்ட தன்னார்வலர்களாக தற்காலிகமாக பணிபுரிய கடந்த 15 ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இதனையடுத்து விண்ணப்பித்த நபர்களுக்கான நேர்முக தேர்வு வரும் 28 ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.
நேர்முக தேர்வுக்கு வரும் விண்ணப்பதாரர்கள் தங்களது கல்வித் தகுதி உள்ளிட்ட பிறசான்றிதழ்களின் அசல் மற்றும் நகல் ஆகியவற்றுடன் விழுப்புரம் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகத்திற்கு நேரில் வரவேண்டும்.
இதில் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அன்று பிற்பகல் 3 மணிக்கு அவர்களிடம் நேர்முகத்தேர்வு நடத்தப்படும். இவ்வாறு மாவட்ட நீதிபதி தெரிவித்துள்ளார்.