/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
இலவச தையல் இயந்திரம் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்
/
இலவச தையல் இயந்திரம் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்
ADDED : ஜூலை 29, 2024 05:15 AM
கள்ளக்குறிச்சி, : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முன்னாள் படைவீரரின் மனைவி, கைம்பெண்கள் இலவச தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி கலெக்டர் பிரசாந்த் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
மாவட்டத்தில் முன்னாள் படைவீரரின் மனைவி, கைம்பெண்கள் மற்றும் திருமணமாகாத மகள்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது. விண்ணப்பதாரர்கள், மத்திய, மாநில அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் தையற்பயிற்சி முடித்த சான்று பெற்றிருக்க வேண்டும்.முன்னதாக இலவச தையல் இயந்திரம் பெற்றிருக்க கூடாது.
தகுதிவாய்ந்த நபர்கள் உரிய சான்றுகளுடன், விழுப்புரம் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு தங்களது பெயரை பதிவு செய்து இலவசமாக தையல் இயந்திரம் பெற்று பயனடையலாம்.

