/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தீ தொண்டு நினைவு நாள் அனுசரிப்பு
/
தீ தொண்டு நினைவு நாள் அனுசரிப்பு
ADDED : ஏப் 16, 2024 06:56 AM

ரிஷிவந்தியம் : ரிஷிவந்தியம் தீயணைப்பு அலுவலகத்தில் தீ தொண்டு நாளையொட்டி தீயணைப்பின் போது உயிர் நீத்த தீயணைப்பு வீரர்களின் நினைவாக அஞ்சலி செலுத்தப்பட்டது.
ரிஷிவந்தியம் தீயணைப்பு நிலையத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, நிலைய அலுவலர் (பொறுப்பு) கமலகாசன் தலைமை தாங்கினார். ஆண்டுதோறும் ஏப்ரல் 14ம் தேதி முதல் 20ம் தேதி வரை தீயணைப்பு சேவை வாரம் அனுசரிக்கப்படுவது வழக்கம்.
இதில், பணியின் போது வீர மரணமடைந்த பணியாளர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தவர்.
ரிஷிவந்தியம் தீயணைப்பு நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில், தீயணைப்பு வீரர்களின் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. அப்போது, தீயணைப்பு வீரர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, பொதுமக்களுக்கு தீ தடுப்பு குறித்த விழிப்புணர்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி
மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலையத்தில், நடந்த நிகழ்ச்சிக்கு, உயிர் நீத்த வீரர்களின் நினைவாக நினைவுத்துாண் அமைத்து, வீரர்களின் விபரங்களை விளக்கி மலர் துாவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
தீயணைப்பு துறை மாவட்ட அலுவலர் இருசம்மாள் தலைமை தாங்கி அஞ்சலி செலுத்தினார். உதவி மாவட்ட அலுவலர்கள் செந்தில், ஜமுனாராணி மற்றும் நிலைய தீயணைப்பு படையினர் பங்கேற்றனர்.

