/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தீ தடுப்பு வழிமுறைகள் குறித்த துண்டு பிரசுரம் வழங்கல்
/
தீ தடுப்பு வழிமுறைகள் குறித்த துண்டு பிரசுரம் வழங்கல்
தீ தடுப்பு வழிமுறைகள் குறித்த துண்டு பிரசுரம் வழங்கல்
தீ தடுப்பு வழிமுறைகள் குறித்த துண்டு பிரசுரம் வழங்கல்
ADDED : ஏப் 16, 2024 06:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி, : சின்னசேலத்தில் தீயணைப்பு துறை சார்பில் தீ தடுப்பு வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
சின்னசேலம் தீயணைப்பு துறை சார்பில் கடந்த 14 முதல் 20ம் தேதி வரை தீ தொண்டு வாரம் அனுசரிக்கப்படுகிறது. அதையொட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் பரமசிவம் தலைமையில் தீ தடுப்பு வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு பிரசுரங்கள் பொதுமக்களிடம் வழங்கப்படுகிறது.
அதில், தீ விபத்து ஏற்படாமல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய வழிமுறைகளும், விபத்து ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய மீட்பு பணிகள் குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.