/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தி.மு.க., வேட்பாளருக்கு கிராமங்களில் பிரசாரம்
/
தி.மு.க., வேட்பாளருக்கு கிராமங்களில் பிரசாரம்
ADDED : ஏப் 08, 2024 07:07 AM

கள்ளக்குறிச்சி: அகரக்கோட்டாலத்தில் தி.மு.க., வேட்பாளர் மலையரசனை ஆதரித்து, சங்கராபுரம் தொகுதி எம்.எல்.ஏ., உதயசூரியன் பிரசாரம் மேற்கொண்டார்.
சங்கராபுரம் சட்டசபை தொகுக்குட்பட்ட அகரக்கோட்டாலம் கிராமத்தில், கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதி தி.மு.க., வேட்பாளர் மலையரசனை ஆதரித்து, தி.மு.க., தெற்கு மாவட்ட செயலாளர் உதயசூரியன் எம்.எல்.ஏ., நேற்று பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், 'திராவிட மாடல் ஆட்சியில், எல்லாருக்கும் எல்லாம் என்ற கொள்கையை பின்பற்றி முதல்வர் ஸ்டாலின் ஆட்சி செய்கிறார்.
சில தினங்களுக்கு முன் காங்., வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் வழங்கப்படும் தினசரி ஊதியம் 400 ரூபாயாக உயர்த்தப்படும்.
மகாலட்சுமி திட்டத்தில் ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என மக்கள் நலன்சார்ந்த பல்வேறு திட்டங்கள் உள்ளன.
பா.ஜ., ஆட்சியை அகற்ற, தேர்தலில் வேட்பாளர் மலையரசனுக்கு உதயசூரியன் சின்னத்தில் ஓட்டளிக்க வேண்டும்' என்றார்.
தண்டலை, வாணியந்தல், ரங்கநாதபுரம், ஆலத்துார், அரியபெருமானுார் உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஓட்டு சேகரித்தனர்.
தி.மு.க., வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் வாணியந்தல் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர் அரவிந்தன், சேர்மன்கள் அலமேலு ஆறுமுகம், நாகராஜன், வி.சி, மாவட்ட செயலாளர் மதியழகன், கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

