/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : ஏப் 11, 2024 05:02 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் 100 சதவீதம் ஓட்டுப் பதிவை வலியுறுத்தி காதுகேளாத வாய்பேசாத மாற்றுத்திறனாளிகள் சார்பில், விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கள்ளக்குறிச்சியில் லோக்சபா தேர்தலையொட்டி, 100 சதவீதம் ஓட்டுப் பதிவை வலியுறுத்தி கலெக்டர் ஷ்ரவன்குமார் அறிவுறுத்தலின்பேரில் மாவட்டம் முழுதும் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி, மாவட்ட காதுகேளாத வாய்பேசாத மாற்றுத்திறனாளிகள் நல சங்கம் சார்பில், கலெக்டர் அலுவலக வளாகத்தில் 100 சதவீதம் ஓட்டளிப்போம் என, உறுதிமொழி ஏற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுப்ரமணி, காதுகேளாதார் சங்க தலைவர் வேலுமணி, துணை தலைவர் ஏசுபால், செயலாளர் பிரசாத், மகளிர் தலைவி மணிவாசகி உட்பட மாற்றுத்திறனாளிகள் பலர் பங்கேற்றனர்.

