/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
100 சதவீதம் ஓட்டுப்பதிவிற்கு விழிப்புணர்வு பிரசாரம்
/
100 சதவீதம் ஓட்டுப்பதிவிற்கு விழிப்புணர்வு பிரசாரம்
100 சதவீதம் ஓட்டுப்பதிவிற்கு விழிப்புணர்வு பிரசாரம்
100 சதவீதம் ஓட்டுப்பதிவிற்கு விழிப்புணர்வு பிரசாரம்
ADDED : ஏப் 02, 2024 10:55 PM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் எதிர்வரும் லோக்சபா தேர்தலில் 100 சதவீதம் ஓட்டளிக்க ஆட்டோ விழிப்புணர்வு பிரசாரத்தை கலெக்டர் துவக்கி வைத்தார்.
கலெக்டர் அலுவலக வளாகத்தல் நடந்த நிகழ்ச்சியில் ஆட்டோ விழிப்புணர்வு பிரசாரத்தை கலெக்டர் ஷ்ரவன்குமார் கொடியசைத்து துவக்கினார். இப்பிரசாரம் மாவட்டம் முழுவதும், அரசின் பல்வேறு துறைகள் மூலமாகவும், தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலமாகவும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, 50 ஆட்டோக்களில் 100 சதவீதம் ஓட்டளிப்பது வலியுறுத்தியும், தேர்தல் நாள் குறித்த ஒட்டு வில்லைகளை கலெக்டர் ஷ்ரவன்குமார் ஆட்டோக்களில் ஒட்டியும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆட்டோ விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. கள்ளக்குறிச்சி நகரப்பகுதியில் முக்கிய சாலைகளில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதில் டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டப் பணி அலுவலர் செல்வி, கள்ளக்குறிச்சி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஜெயபாஸ்கரன் மற்றும் அரசு அலுவலர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர்.

