/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாணவியிடம் சில்மிஷம் 'போதை' வாலிபர் கைது
/
மாணவியிடம் சில்மிஷம் 'போதை' வாலிபர் கைது
ADDED : டிச 18, 2025 05:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம்: காங்கேயம் பஸ் ஸ்டாண்டில் நேற்று, கல்லுாரி மாணவி ஒருவர், பஸ்சுக்கு காத்திருந்தார்.
அப்போது, 'போதை'யில் இருந்த ஒருவர், அந்த மாணவியிடம் சில்மிஷம் செய்துள்ளார். உடனே அந்த மாணவி, காங்கேயம் போலீசாருக்கு போன் செய்து தகவல் கொடுத்தார். அந்த வாலிபர், அங்கிருந்து தப்பி ஓடவே, மாணவி கூச்சலிட, பயணியர் சுற்றிவளைத்து பிடித்தனர். உடனே போலீ-சாரும் வந்து விட, வாலிபரை ஒப்படைத்தனர். விசாரணையில் காங்கேயம் பஸ் ஸ்டாண்ட் அருகே வசிக்கும் சதாம் உசேன், 35, என்பதும், தனியார் குளிர்பான நிறுவனத்தில் வேலை பார்ப்பதும் தெரிந்தது. இதையடுத்து அவரை, போலீசார் கைது செய்தனர்.

