/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோடு-கரூர் பிரதான சாலையில் ரயில்வே மேம்பாலம் அமை-யுமா?
/
ஈரோடு-கரூர் பிரதான சாலையில் ரயில்வே மேம்பாலம் அமை-யுமா?
ஈரோடு-கரூர் பிரதான சாலையில் ரயில்வே மேம்பாலம் அமை-யுமா?
ஈரோடு-கரூர் பிரதான சாலையில் ரயில்வே மேம்பாலம் அமை-யுமா?
ADDED : ஜன 16, 2026 04:29 AM
ஈரோடு: ஈரோட்டில் இருந்து கரூர் மாவட்டத்துக்கு செல்லும் பிரதான சாலை, இரண்டு வழிச்சாலையாக உள்ளது. இதன் வழியாக தென் மாவட்டங்களுக்கு தினமும் ஏராளமான பஸ்கள் இயக்கபடுகிறது. கார்கள், கனரக வாகனங்களும் ஆயிரக்கணக்கில் செல்கின்றன. இந்நிலையில் சாவடிப்பாளையம் அருகே கேட்புதுார் மற்றும் பஞ்-சலிங்கபுரம் அருகே ஆரியங்காடு என இரு இடங்களில் ரயில்வே நுழைவு பாலம் உள்ளது. மழைக்காலத்தில் பாலங்களில் தண்ணீர் தேங்குவதால் போக்குவரத்து பாதிக்கிறது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:ஆரியங்காடு நுழைவு பாலத்தை, மொடக்குறிச்சி சுற்றுவட்டார பகுதியில் இருந்து வரும் மழை நீர் சூழ்வதால், போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இதுபோன்ற சமயங்களில் வாகனங்கள் மொடக்குறிச்சி வழியாக திருப்பி விடப்படுகிறது. சாவடிப்பா-ளையம் அருகேயுள்ள கேட்புதுார் ரயில்வே நுழைவு பாலத்திலும் இதே பிரச்னைதான் நிலவு
கிறது.
இந்த நுழைவு பாலத்தில் முன் அமைக்கப்படும் தடுப்பு கம்-பியில், அடிக்கடி கனரக வாகனங்கள் உரசி விபத்தில் சிக்குகின்-றன. இதுபோன்ற சமயங்களில் போக்குவரத்து பாதிப்பதோடு, ரயில்களுக்கும் பாதுகாப்பில்லாத சூழல் ஏற்படுகிறது.
இந்த இரண்டு ரயில்வே நுழைவு பாலத்தில் நிலவும் சிக்கல்க-ளுக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தும் விதமாக, நுழைவு பாலத்தை மேம்பாலமாக மாற்றி அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும்- கரூர் சாலையை அகலப்
படுத்த வேண்டும். இவ்வாறு கூறினர்.--

