ADDED : பிப் 26, 2024 07:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு : கோடை காலம் தொடங்கும் முன்பே, ஈரோட்டில், ௧௦௦ டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதனால் வெப்பத்தின் தாக்கத்தை குறைக்கும் தர்பூசணி விற்பனையும், முன்கூட்டியே தொடங்கி விட்டது.
ஈரோட்டில் பி.பெ.அக்ரஹாரம், கருங்கல்பாளையம், சோலார், திண்டல், கனிராவுத்தர் குளம், சி.என்.கல்லூரி, சூளை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், சாலையோரங்களில் தற்காலிக தர்பூசணி கடை அமைந்துள்ளது. இவற்றில் தர்பூசணி வியாபாரம் சூடு பறக்க நடக்கிறது.
இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது: திண்டிவனம், சூலுார் பகுதிகளில் இருந்து தற்போது தர்பூசணி வரத்தாகிறது. ஒரு கிலோ, 26 ரூபாய்; ஒரு துண்டு, 10 ரூபாய்க்கும் விற்கிறோம். வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்பதால், அதிக அளவில் விற்பனையும் இருக்கும். இவ்வாறு கூறினர்.

