/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வாக்காளர்களுக்கு பட்டுவாடா மாவட்டத்தில் 24 புகார் பதிவு
/
வாக்காளர்களுக்கு பட்டுவாடா மாவட்டத்தில் 24 புகார் பதிவு
வாக்காளர்களுக்கு பட்டுவாடா மாவட்டத்தில் 24 புகார் பதிவு
வாக்காளர்களுக்கு பட்டுவாடா மாவட்டத்தில் 24 புகார் பதிவு
ADDED : ஏப் 19, 2024 06:33 AM
ஈரோடு : ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகளை கண்காணிக்கும் வகையில், தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு வரும் புகார்கள் விசாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு, 119 புகாரும், சி-விஜில் செயலி மூலம், 52 புகார் என, 171 புகார் வந்துள்ளது. கடந்த இரண்டு நாளில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டது தொடர்பாக அதிகமாக புகார் வந்தது.ஈரோடு மணல்மேடு, பழையபாளையம் உட்பட மாவட்டம் முழுவதிலும், 24 புகார் வந்தது. . இந்த புகார்களின் அடிப்படையில் பறக்கும் படை அதிகாரிகள் நேரில் சென்று விசாரித்து, விதிமீறல், போலீஸ் துறை விசாரணை என நடவடிக்கை எடுத்துள்ளனர். இதேபோல் மாவட்ட அளவில் தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக, 53 வழக்குகள் போலீசில் பதிவு செய்யப்பட்டுள்ளன.