/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரயில்வே நுழைவு பாலத்தில் மீண்டும் குழாய் சேதம் கொல்லம்பாளையத்தில் சோகம்

ADDED : நவ 08, 2025 04:53 AM
ஈரோடு:ஈரோடு
காளைமாட்டு சிலை அருகில் உள்ள கொல்லம்பாளையம் ரயில்வே நுழைவு பாலம்
வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன. இதில்
இரண்டு நுழைவு பகுதிகள் உள்ளதால், இலகுரக வாகனங்கள் மேல்
பாலத்திலும், கனரக வாகனங்கள் கீழ் பாலத்தின் வழியாகவும் செல்கின்றன.
கீழ்பாலத்தில் மழைநீர் வடிகால், சாக்கடை கழிவுநீர் செல்ல குழாய்
அமைக்கப்பட்டுள்ளது. கனரக வாகனங்களால் இந்த குழாய் அடிக்கடி
உடைவதும், சீரமைப்பு நடப்பதும் சமீப கால வாடிக்கையாக மாறிவிட்டது. கடந்த மாதத்தில், 20 நாட்களுக்கும் மேலாக போக்குவரத்து
துண்டிக்கப்பட்டு வடிகால் சீரமைப்பு பணி செய்தனர். கனரக
வாகனங்களின் எடையை தாங்கும் விதமாக குழாய் மீது கான்கிரீட் தளம்
அமைத்ததாக கூறினர்.
இந்நிலையில் நேற்று காலை கான்கிரீட் தளம்
பெயர்ந்து குழாய் உடைந்து பாலத்தில் கழிவுநீர் தேங்கி, வேதாளம் மீண்டு்ம
முருங்கை மரம் ஏறியுள்ளது. இதனால் பெரிய வாகனங்கள் செல்லும்போது
டூவீலர்கள் மீது மீது கழிவுநீரை வாரியிறைக்கும் நிலை
ஏற்பட்டுள்ளது. இதை உடனடியாக பார்த்து சீரமைப்பு செய்வார்களா
அல்லது வழக்கம்போல் தும்பை விட்டு வாலை பிடிக்கும் கதை நடக்குமா? என்று,
வாகன ஓட்டிகள் மத்தியில் கவலை எழுந்துள்ளது.