/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மோடி தலைமையில் மீண்டும் ஆட்சி திருப்பூர் பா.ஜ., வேட்பாளர் கணிப்பு
/
மோடி தலைமையில் மீண்டும் ஆட்சி திருப்பூர் பா.ஜ., வேட்பாளர் கணிப்பு
மோடி தலைமையில் மீண்டும் ஆட்சி திருப்பூர் பா.ஜ., வேட்பாளர் கணிப்பு
மோடி தலைமையில் மீண்டும் ஆட்சி திருப்பூர் பா.ஜ., வேட்பாளர் கணிப்பு
ADDED : ஏப் 13, 2024 07:33 AM
டி.என்.பாளையம் திருப்பூர் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட, கோபி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, டி.என்.பாளையம் ஒன்றியம் கள்ளிப்பட்டி, கணக்கம்பாளையம் கொண்டையம்பாளையம், டி.என்.பாளையம் உள்ளிட்ட பகுதிகளில், திருப்பூர் லோக்சபா தொகுதி பா.ஜ., வேட்பாளர் முருகானந்தம் நேற்று ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது கொண்டையம்பாளையத்தில் அவர் பேசியதாவது: விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ஊக்கத்தொகை, 6,000 தந்தவர், நமது பாரத பிரதமர் மோடி. நுாறு நாள் வேலை திட்டத்தில் உங்களது பணம் ஏமாற்றப்பட்டிருந்தால், உங்களது பணத்தை வட்டியுடன் மீட்டு தருவேன்.
மோடி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைந்தவுடன், நுாறு நாள் வேலை திட்டத்தில் யாரும் திருட முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.