/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
இது பருவம் தவறிய திறப்பு 'ஏப்., 15ல் திறப்பதே சரி'
/
இது பருவம் தவறிய திறப்பு 'ஏப்., 15ல் திறப்பதே சரி'
இது பருவம் தவறிய திறப்பு 'ஏப்., 15ல் திறப்பதே சரி'
இது பருவம் தவறிய திறப்பு 'ஏப்., 15ல் திறப்பதே சரி'
ADDED : மே 27, 2025 01:45 AM
தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசனங்களின், முதல் போக சாகுபடிக்கு நேற்று தண்ணீர் திறந்தது குறித்து, கொடிவேரி அணை - பவானி நதி பாசன விவசாயிகள் சங்கத்தலைவர் சுபி தளபதி கூறியதாவது: ஏப்.,15ல் தண்ணீர் திறந்திருக்க வேண்டும். பவானிசாகர் அணையில், 70 அடி தண்ணீர் இருப்பு இருந்தும், தாமதமாக தற்போது தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதை நாங்கள் பருவம் தவறிய நீர் திறப்பாகவே கருதுகிறோம். இனிவரும் காலங்களில், ஏப்.,15ல் நீர் திறக்க வேண்டும். கொடிவேரி தடுப்பணையின், 536 ஆண்டு வரலாற்று விதிகளை, நீர்வள ஆதாரத்துறை, மாவட்ட நிர்வாகம் பின்பற்ற வேண்டும். குடிமராமத்து மற்றும் துார்வாரும் பணிகளை முன்கூட்டியே முடிக்க வேண்டும்.
அதேபோல் எங்கள் பாசனங்களுக்கு, 200 டன் விதை நெல் தேவைப்படுகிறது. ஆனால் கோபி வேளாண்மை துறையில் இதுவரை டி.பி.எஸ்., 5 என்ற ரக விதை நெல், 25 டன் மட்டுமே வினியோகிக்கப்பட்டுள்ளது. கோ-51 முதல், கோ----55 வரை உள்ள சன்னரக விதை நெல்லுக்கு, சாகுபடியில் முன்னுரிமை கொடுக்க, தமிழக அரசு விவசாயிகளை வலிறுத்துகிறது. ஆனால், அந்த சன்னரக நெல் போதிய எடை கிடைப்பதில்லை. இந்த ரகத்துக்கு கிலோவுக்கு ஐந்து ரூபாய் விலை கூடுதலாக தந்தால், தாராளமாக அந்த ரகத்தை விவசாயிகள் பயிரிட தயாராக இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

