ADDED : ஏப் 08, 2024 07:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம்: வெள்ளகோவில் அருகே பாப்பம்பாளையத்தை சேர்ந்தவர் செல்வராஜ், 45; மேட்டுப்பாளையம் அருகே உள்ள நாட்ராயசாமி கோவில் அருகே தேங்காய், பழம் வியாபாரம் மற்றும் தேங்காய் பருப்பு, ஆடு வியாபாரம் செய்து வந்தார்.
கடன் வாங்கி வியாபாரம் செய்துள்ளார். இந்நிலையில் நஷ்டம் ஏற்படவே பணம் கொடுத்தவர்கள் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இதனால் கடை அருகேயுள்ள மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர். தற்கொலை செய்து கொண்ட செல்வராஜுக்கு மனைவி சத்யாதேவி, 33; மற்றும் ௧௪ வயதில் ஒரு மகள் உள்ளனர்.

