நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னிமலை,: சென்னிமலையில் அரச்சலுார் ரோடு வீரப்பம்பாளையத்தில், கிருஷ்ண துளசி கோசாலை உள்ளது. இதன் வளாகத்தில் அமுத கண்ணன் கோவில் அமைக்கப்பட்டுள்ளது. கோவிலின் மகா கும்-பாபிஷேகத்தை முன்னிட்டு நடந்த மண்டல பூஜை நிறைவு நாள் விழா நேற்று நடந்தது.
இதையொட்டி உலக நன்மைக்காக, அமுத கண்ணனுக்கு பல்-வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. விழா முக்-கிய நிகழ்வாக மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு, பக்தர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்-டனர். அரச்சலுார் தத்வமசி ஐயப்பமார் குழுவினரின் சிறப்பு பஜனை நடந்தது.
உங்கள் மாவட்ட தொகுதிகளின் முழுமையான தேர்தல் தகவல்களை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

