/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
புது திட்டங்களை செயல்படுத்த ஆதரவு தி.மு.க., வேட்பாளர் தீவிர பிரசாரம்
/
புது திட்டங்களை செயல்படுத்த ஆதரவு தி.மு.க., வேட்பாளர் தீவிர பிரசாரம்
புது திட்டங்களை செயல்படுத்த ஆதரவு தி.மு.க., வேட்பாளர் தீவிர பிரசாரம்
புது திட்டங்களை செயல்படுத்த ஆதரவு தி.மு.க., வேட்பாளர் தீவிர பிரசாரம்
ADDED : மார் 30, 2024 02:13 AM
ஈரோடு:ஈரோடு
தொகுதி தி.மு.க., வேட்பாளர் கே.இ.பிரகாஷ், கூட்டணி கட்சியினருடன்
வீரப்பன்சத்திரம், சி.என்.கல்லுாரி பகுதி, மல்லி நகர், ராஜாஜி வீதி,
தெப்பக்குளம் வீதி, சிதரம்பரனார் வீதி, காவிரி சாலை, அம்மன் நகர்,
ஓம்காளியம்மன் கோவில் உட்பட பல்வேறு பகுதிகளில் நேற்று ஓட்டு
சேகரித்தார்.
அப்போது அவர் பேசியதாவது: ஈரோடு தொகுதி
வளர்ச்சிக்காக அமைச்சர்கள் முத்துசாமி, சாமிநாதன், கயல்விழி
செல்வராஜ் பல்வேறு திட்டப்பணிகளை ஆற்றி உள்ளனர்.
சி.என்.கல்லுாரியை அரசு கல்லுாரியாக்கவும், அங்கு விளையாட்டு
அரங்கம் அமைக்கவும், கனி ராவுத்தர் குளம் அருகே புதிய பஸ் ஸ்டாண்ட்
அமைக்கவும் பணி நடந்து வருகிறது.
முதல்வர் ஸ்டாலினின் மகளிர் உரிமை
தொகை, அரசு பஸ்களில் இலவச பயணம், கல்லுாரி மாணவ, மாணவியருக்கு
மாதம், 1,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கி வருகிறார். பள்ளி
குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி திட்டம், மிகுந்த பலனை தந்து
வருகிறது. மேலும் பல திட்டங்களை செயல்படுத்த, புதிய திட்டங்களை
கொண்டு வர, உதயசூரியனுக்கு ஓட்டு போடுங்கள். இவ்வாறு பேசினார்.
பெண்கள்
ஆரத்தி எடுத்து வரவேற்பு வழங்கினர். தெற்கு மாவட்ட காங்., தலைவர்
மக்கள்ராஜன், மாநகராட்சி கவுன்சிலர் ஈ.பி.ரவி, தி.மு.க., பகுதி
செயலாளர் நடராஜன், மாவட்ட துணை செயலாளர் செந்தில்குமார், சின்னையன்,
மாநில மாணவரணி துணை செயலாளர் வீரமணி, சி.ஐ.டி.யு., மாரிமுத்து, தலைமை
கழக பேச்சாளர் இளையகோபால் உட்பட பலர் பங்கேற்றனர்.

